கொழும்பில் பொலிசார் தீவிர கண்காணிப்பில்-வெளியான அதிர்ச்சி காரணம்

 

மாளிகாவத்தை - துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் தாக்குதல்கள் ஏதேனும் நடைபெறலாமா என்ற அச்சத்தில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

எதிரெதிர் பாதாள உலகக் குழுக்களுக்கிடையேயான கோஷ்டி மோதலே இச்சம்பவத்திற்குக் காரணம் எனப் பொலிஸ் வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து உயிரிழந்தவர், இரும்புக்கடை உரிமையாளரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 'முகமது நஜிம் முகமது இம்ரான்' எனப்படும் கஞ்சிபானி இம்ரானின் மாமாவும் ஆவார். 

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றுள் 14 மரணங்களும் 13 காயச் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment