தனியார் வகுப்புகளுக்கு சென்ற மூன்று மாணவிகளை காணவில்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பலாங்கொடை பின்னவல எல்லராவ, பகுதியை சேர்ந்த மூன்று மாணவிகளையே காவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரத்தினபுரி பலாங்கொடை பகுதியில் அமைந்தள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளே காணாமல் போயுள்ளனர்.
17 வயுதுடைய கௌசல்யா, 17 வயதுடைய சர்மிளா, மற்றும் 17 வயதுடைய சதுனி ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் தொடர்பில் தகவல் கிடைக்கும் பட்சத்தில் 0452287222 என்ற பலாங்கொiடை பொலிஸ் நிலையத்தின் இலக்கத்திற்கோ அல்லது 0767070913 0771658788 ஆகிய பெற்றோர்களின் இலக்கத்திற்கோ அறிவிக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பலாங்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
