பெங்களூரு ஜக்கூரில் நேபாள இளம்பெண்கள் 2 பேர் தூக்கில் பலி: கொலையா தற்கொலையா என பொலிஸ் விசாரணை

 

இந்தியா பெங்களூரு ஜக்கூர் பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் இருவர் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

எலகங்கா பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஜக்கூரில் உள்ள ஹோட்டல் அருகே காலி நிலத்தில் இருந்த மரத்தில் நேற்று காலை சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

உயிரிழந்தவர்கள் 22 வயது சைஜனா மற்றும் 23 வயது ரீட்டா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் சுமார் 15 நாட்களுக்கு முன் நேபாளத்தில் இருந்து வந்து பெங்களூருவில் வீட்டு வேலை செய்து வந்துள்ளனர்.

ஒரே சேலையை பயன்படுத்தி தூக்கில் தொங்கிய நிலை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தற்கொலையா அல்லது கொலையா என பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அறிக்கைக்கு பின்னரே மரண காரணம் உறுதியாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.



Post a Comment