2027 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிவித்தல்

 

2027 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, 2027 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கிக்கான அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள நபர்களும் நிறுவனங்களும் தமது அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கையை நாளை (01) முதல் ஆரம்பிக்கின்றன.

கைத்துப்பாக்கிக்குரிய அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுள்ள அனைத்து நபர்களும் நிறுவனங்களும் 2026 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் தமது அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2026 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்காத அனைத்து உரிமையாளர்களுக்கு எதிராக, துப்பாக்கிச் சட்டத்தின் 22 ஆவது பிரிவிற்கு இணங்க, செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி தீயாயுதத்தை உடமையில் வைத்திருத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் குறித்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2026.09.01 முதல் 2026.12.31 வரையிலான காலப்பகுதிக்குள் பதிவைப் புதுப்பிக்காத அனைவருக்கும் தாமதக்; கட்டணம் அறவிடப்படுவதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment