சம்பளம் குறைவாக வழங்கும் இலங்கைக்கு 120 வது இடம்

 

Visual Capitalist standard, International Labour Organization (ILO) தரவுகளின்படி, வாங்கும் திறன் சமநிலைக்கு (PPP) ஏற்ப சரிசெய்யப்பட்ட மாதாந்திர குறைந்தபட்ச ஊதியப் பட்டியலில் (அமெரிக்க டாலரில்), இலங்கை 130 நாடுகளில் 120வது இடத்தை பிடித்துள்ளது.

இலங்கையின் மாதாந்திர குறைந்தபட்ச ஊதியம் USD 200 ஆக உள்ளது. 

இது உலகளவில் மிகவும் குறைந்த ஊதியங்களில் ஒன்றாகும். 

மேலும், கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்ட தெற்காசிய நாடுகளில் இலங்கை கடைசி இடத்தில் உள்ளது.

பிற தெற்காசிய நாடுகளின் விவரங்கள்:

பாகிஸ்தான்: 68வது இடம் (USD 570)

நேபாளம்: 78வது இடம் (USD 490)

பங்களாதேஷ்: 89வது இடம் (USD 379)

இந்தியா: 111வது இடம் (USD 233)

உலகளாவிய முன்னணி நாடுகள்:

சுவிட்சர்லாந்து USD 3,804 ஊதியத்துடன் இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

ஆசிய அளவில் தென்கொரியா USD 2,362 பெறப்பட்டு மிக உயர்ந்த இடத்தை வகிக்கிறது.

Post a Comment