11 வயது சிறுவனுக்கு இறைவனாய் வந்தருளிய படையினர்

 

மாத்தறை - பொல்ஹேன கடற்கரையில் நேற்று (24) மாலை நீராடிக்கொண்டிருந்தபோது கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட 11 வயது சிறுவன் ஒருவன், மாத்தறை பொலிஸ் உயிர்ப்பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளான்.

கடற்கரையில் கடமையில் ஈடுபட்டிருந்த மாத்தறை பொலிஸ் உயிர்ப்பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயங்க, (40674) , பொலிஸ் கான்ஸ்டபிள்களான (16928) பண்டார, (99558) சந்தருவன் மற்றும் (104340) இந்திக ஆகிய அதிகாரிகள் உடனடியாகச் செயற்பட்டு இந்தச் சிறுவனைக் காப்பாற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சிறுவனுக்குத் தேவையான ஆரம்ப முதலுதவிகள் வழங்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக அவனை மாத்தறை மருத்துவமனையில் சேர்ப்பதற்கும் குறித்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Post a Comment