தீவிரமடையும் பற்றாக்குறை: ஏற்படவுள்ள அபாய நிலைமை தொடர்பில் பிரதி அமைச்சர் எச்சரிக்கை.
எதிர்வரும் காலத்தில் நாட்டில் குறிப்பிடத்தக்க எரிபொருள் பற்றாக்குறை, மின்சாரப் பற்றாக்குறை மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
