வெள்ளி முதல் ஈழத்தில் ஏற்பட போகும் மாற்றம்-சற்று முன் மக்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு

 

வெள்ளி முதல் வடக்கு கிழக்கில் வெப்பச்சலன இடிமழைக்கு வாய்ப்பு.!

நாடுமுழுவதும் அதிகரித்திருக்கும் வெப்பநிலை காரணமாக புவி மேற்பரப்பிலுள்ள நீர் ஆவியாதல் தீவிரமடைவதால், வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஈரப்பதன் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளன.

வருகின்ற 3ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் உலர் வலயப்பகுதிகளில் மதியநேர வெப்பநிலை 35 - 40 பாகை செல்சியஸ் வரை உயர்வடையும் என்பதோடு, குறித்த நேரத்தில் காற்றின் வேகம் முற்றிலுமாக குறைவடைந்து, காற்று முறிவு ஏற்படுதல் காரணமாக வெப்பச்சலன மழைவீழ்ச்சி பதிவாகும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.

வடக்கில் குறிப்பாக வவுனியா மற்றும் வன்னி மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் 3 மற்றும் 4ம் திகதிகளில் பிற்பகல் நேரத்தில் ஓரிரு மணிநேரம் கனமழை செய்யக்கூடுமென எதிர்பார்க்கப்படுவதுடன், யாழ்ப்பாணத்திலும் ஆங்காங்கே மேகமூட்டத்துடன் சாதாரண மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் எதிர்வு கூறப்படுகிறது.

அதிகரித்திருக்கும் அசாதாரண வெப்பநிலை அதனுடன் இணைந்த வெப்பச்சலன மழை மற்றும் ஆபத்தான இடிமின்னல் தாக்கங்கள் தொடர்பாக வருகின்ற 3ம் திகதியில் இருந்து அடுத்துவரும் ஒருவார காலம் சற்று அவதானமாக செயற்படுதல் பாதுகாப்பாக அமையும்.!



கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.