தெனியாய பகுதியில் பாடசாலைப் பாடங்களைப் படிக்காமல், கையடக்க தொலைபேசியில் டிக் டொக் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்த 13 வயது சிறுவனை, அவரது தந்தையே சூடான இரும்புக்கம்பியால் சுட்டு காயப்படுத்தியுள்ளார்.
இந்த கொடூர செயலைச் செய்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அன்றைய தினம் வேலைக்குச் சென்ற தந்தை தனது கையடக்க தொலைபேசியை வீட்டில் மறந்து வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
அதனைப் பயன்படுத்திய சிறுவன் நீண்டநேரம் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்ட தந்தை, கடும் கோபத்தில் இரும்புக்கம்பியால் சிறுவனை சுட்டுள்ளார்.
மறுநாள் காயங்களுடன் பாடசாலைக்குச் சென்ற சிறுவன், ஆசிரியர்களிடம் விபரத்தைக் கூறியுள்ளார்.
அதிபர் உடனடியாகச் சிறுவனை மீட்டுத் தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிறுவன் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தச் தெனியாய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன அமரத்ன தலைமையிலான குழுவினர், அந்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனின் தாய் நீண்டகாலமாகப் படுக்கையிலிருந்த நிலையில், அந்த வீட்டில் ஒருவேளை உண்பதற்கு உணவுகூட இல்லாமல் இருந்துள்ளது.
