இன்று பாடசாலைகளுக்கு விடுமுறையா-வெளியான தகவல்

 

2025–26 கல்வியாண்டு நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுகள் முடிந்து, அவர்கள் கோடை விடுமுறையில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து, 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 


மேலும், 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி, 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி தேர்வுகள் நடைபெறவுள்ளது. 


இதனால் மாணவர்கள் தேர்வுக்காக தயாராகி வருகின்றனர். 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஆரம்பமாகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கும். அவசர சேவைகள் மட்டும் குறைந்த பணியாளர்களுடன் செயல்படும் இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஏப்ரல் 18ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் மாற்றப்பட்டு, 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்ச்சியாக சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் விடுமுறை இருந்த நிலையில், கூடுதலாக ஏப்ரல் 6ஆம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதனால் புதுக்கோட்டை மாவட்ட மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். மேலும் தேர்வுகளுக்காக சிறப்பாக தயாராகும் வாய்ப்பையும் இந்த விடுமுறை வழங்குகிறது. குறிப்பாக, தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அந்த இடைவெளியை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.