ஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட பின்னர் காணமால் போன F-15E விமானத்தின் ஆயுத அதிகாரி (Weapons Officer) மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
“நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்!
என் சக அமெரிக்கர்களே, கடந்த சில மணி நேரங்களில், அமெரிக்க இராணுவம் தனது வரலாற்றில் மிகத் துணிச்சலான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
அது எங்கள் சிறந்த விமானப்படை குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் மிகவும் மதிப்புமிக்க கேர்ணல் (Colonel) அதிகாரி ஒருவரும் ஆவார்.
அவர் தற்போது முழுமையாக பாதுகாப்பாகவும் நலமாகவும் உள்ளார் என்பதை உங்களிடம் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்!” என truths சமூகவலைத்தளத்தில் தெரிவிப்பு.
