மாணவ பெற்றோர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

 

2026ம் ஆண்டு முதல் பாடசாலைகளில் தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை இணைத்துக் கொள்வது (தரம் 5 மற்றும் 6 தவிர்த்து) தொடர்பில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. 

குறித்த 2026.03.31ம் திகதியுடைய 09/2026 சுற்றுநிருபத்தின் பிரகாரம் 2026 கல்வியாண்டில் தேசிய பாடசாலைகளின் இடைநிலைத் தரங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

அதற்கான வெற்றிடங்கள் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் இணையத் தளத்தில் பிரசுரிக்கப்படும். 

இதற்கு விண்ணப்பிக்க எதிர்பார்க்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும், 09/2026 இலக்கச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, 2026.04.27 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து மேலதிக ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்குப் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.