மனதை நெகிழ வைத்த காட்சி 💔
வாழ்நாள் முழுவதும் உணவளித்த எஜமானின் உடலை சுமந்து சென்ற காளைகள்!
மன்னார் - நறுவிலிகுளத்தில் இடம்பெற்ற இறுதி ஊர்வலம் ஒன்றில், பூதவுடலை காளைகள் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காளைகளின் எஜமான் இயற்கை எய்திவிட்டார். தான் இறந்தால், தனது உடலை காளைகள் பூட்டிய தனது மாட்டு வண்டியிலேயே எடுத்து செல்ல வேண்டும் என்பது அவரது கோரிக்கையாக இருந்தது.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற அவரது இறுதி ஊர்வலமானது அவரது விருப்பத்திற்கு ஏற்றவாறு காளைகள் பூட்டிய வண்டிலிலேயே இடம்பெற்றது.
எஜமானின் உடலை சுமந்து சென்ற காளைகளின் முகத்திலும் சோக உணர்வு காணப்பட்டது. இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.



