கொரியா செல்லும் கனவுகளோடு வகுப்புக்கு சென்ற இளைஞன் டிப்பர் மோதி சம்பவ இடத்திலே பலி

 

நாவலப்பிட்டி - கம்பளை பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த விபத்தில் உலப்பனை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

உயிரிழந்த இளைஞர் நாவலப்பிட்டி நகரில் நடைபெறும் கொரிய மொழி கற்பிக்கும் மேலதிக வகுப்பில் கலந்துகொள்வதற்காகச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது. 

குறித்த இளைஞர் அதிவேகமாகப் பயணித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

டிப்பர் வாகனத்தின் சாரதி நாவலப்பிட்டி பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.