இலங்கையில் எரிபொருள் விலை வரலாறு காணாத வகையில் உயரும்

 

மத்திய கிழக்கு போர் முடிவுக்கு வராவிட்டால் இலங்கை நிலை சிக்கலாகும்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் முடிவுக்கு வராவிட்டால், இலங்கைப் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அட்வொகாட்டா (Advocata) நிறுவனத்தின் தலைவர் முர்டசா ஜெபர்ஜி இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இலங்கையில் டீசல் விலை 600 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் போக்குவரத்து மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உயர்ந்து, பணவீக்கம் 7 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டு வருமானத்தில் 70 சதவீதம் மத்திய கிழக்கில் வாழும் 10 இலட்சம் தொழிலாளர்கள் மூலமே கிடைக்கின்றன. இந்த நிலையில், போர்ச் சூழலால் அங்குள்ள தொழிலாளர்களின் வேலைநாட்கள் குறைக்கப்பட்டுள்ளதால், இலங்கைக்குக் கிடைக்கும் வருமானம் பெருமளவு வீழ்ச்சியடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.