கம்பஹாவில் பெண் படுகொலை: 76 வயது கணவர் கைது!

கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

 


கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி, கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகவிற்ற பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்த சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். 

 

குடும்பத் தகராறு காரணமாக, உயிரிழந்த பெண்ணின் கணவரே அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளமை விசாரணைகளின் ஊடாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

 

அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் விளைவாக, குறித்த பெண்ணின் கணவர் நேற்று (03) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

கைது செய்யப்பட்டவர் 76 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.