வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு ; எரிபொருள் QR பதிவில் புதிய கட்டுப்பாடு

 


எரிபொருள் QR முறைமையின் கீழ் ஒரு தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் ஒரு தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி ஒரு வாகனத்தை மாத்திரமே பதிவு செய்ய முடியும் என அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க இது குறித்த மேலதிக விபரங்களை வெளியிட்டார்.

ஒரு நபர் தனது அடையாள அட்டையைப் பயன்படுத்தி ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களைப் பதிவு செய்ய முடியாது.இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்ட போது, வாகனங்களை ஏற்கனவே கைமாற்றிய பலருக்கு மீளப் பதிவு செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டன.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை முகாமைத்துவம் செய்வதற்கும், விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதற்குமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒருவரிடம் அதிகப்படியான வாகனங்கள் காணப்படுமாயின், அவை வணிகப் பதிவு இலக்கத்தின் கீழ் ஒரு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.

"நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில், தனிநபர் ஒருவர் இரண்டு அல்லது மூன்று வாகனங்களைப் பயன்படுத்துவது அவசியமற்றது என்பதே எனது தனிப்பட்ட கருத்து," என சுமுது ரத்நாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.