ஒரு அடையாள அட்டையின் கீழ் QR-சற்று முன் வெளியான அறிப்பு

 

ஒரு அடையாள அட்டை இலக்கத்தின் கீழ் QR முறைமையூடாக ஒரு வாகனத்தை மாத்திரமே பதிவு செய்ய முடியும் என அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க 'அத தெரண BIG FOCUS' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார். 

"ஒரு அடையாள அட்டை மற்றும் ஒரு தொலைபேசி இலக்கத்திற்கு ஒரு வாகனத்தை மாத்திரமே பதிவு செய்ய முடியும் என்ற கொள்கை ரீதியான தீர்மானத்தை நாம் எடுத்துள்ளோம். 

இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும் போது, வாகனங்களை கைமாற்றிய பலர் இருந்தனர். அவர்களால் பதிவு செய்ய முடியாமல் போனது. 

ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதற்காகவே நாம் இந்த QR முறைமையை அறிமுகப்படுத்தினோம். அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் இருந்தால் BRN (வணிகப் பதிவு இலக்கம்) எனும் தனிப்பிரிவு உள்ளது. 

நாட்டின் நெருக்கடியான நிலையில், ஒரு தனிநபர் இரண்டு மூன்று வாகனங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்" என அவர் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.