ஆபத்தின் விளிம்பில் இலங்கை! தொடருமானால் இலங்கை முதலாவது இடத்திற்கு மாறும்?

 


 ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளால் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட கப்பல் போக்குவரத்துத் தடை, உலகப் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

யூரியா, பொட்டாசியம், அமோனியா மற்றும் பொஸ்பரஸ் போன்ற உலகளாவிய விவசாய உரத் தேவைகளில் மூன்றில் ஒரு பங்கு பொதுவாக இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. வட அரைக்கோளத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் பெரும்போக செய்கை மேற்கொள்ளப்படுவதால், உரத் தட்டுப்பாடு காரணமாக ஆண்டின் பிற்பகுதியில் பயிர் விளைச்சல் குறைவதைத் நேரடியாகப் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கீல் நிறுவனத்தின் தரவுகளுக்கமைய, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால், பொருட்களின் விலைகள் மிக அதிகமாக அதிகரிக்கக்கூடிய நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்படும் ஒட்டுமொத்த உயர்வால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் நாடுகள் ஷாம்பியா 30.7 சதவீதத்துடன் முதலிடத்திலும், இலங்கை 15.3 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், தாய்வான் 12.5 சதவீதத்துடன் நான்காம் இடத்திலும் மற்றும் பாகிஸ்தான் 11.4 சதவீதத்துடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளது.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.