சக்தி வாய்ந்த பிரதோஷம்-இன்றைய ராசிபலன்

 

இன்று மார்ச் 16, 2026 திங்கட் கிழமை, பங்குனி மாதம் 2ம் தேதி, மகரம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மீனத்தில் சூரியன் - சுக்கிர சேர்க்கை சஞ்சாரம் நடக்கிறது. இன்று ரிஷபம், கன்னி, மீன ராசிக்கு நன்மை தரும். மிதுனம் ராசியில் உள்ள திருவாதிரை பின்பு புனர்பூசம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. பிரதோஷ தரிசனம் செய்யவும்.


மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்றுஇடமிருந்து உங்களுக்கு சிறப்பு மரியாதை கிடைக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்களுடைய நிதி, பொருள் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் உருவாகும். சந்திரனின் அமைப்பு உங்களுக்கு நல்ல கூட்டணியை அமைக்க உதவும். இன்று நீங்கள் சில புகைப்படத்திற்கு ஒப்பந்தங்கள் பெற வாய்ப்பு உண்டு. உங்கள் வீட்டில் சுப நிகழ்வுகள் நடப்பது, அல்லது சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தொடர்பான மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கும். சுப செலவுகளால் சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும்.


ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் உங்களுடைய கவனம் அதிகரிக்கும். புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்லுதல் நல்லது கலாச்சாரத்தை அனுபவிப்பது என புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். இன்று எந்த ஒரு சட்ட பிரச்சனைகளிலும் நீங்கள் வெற்றி பெறலாம். இடமாற்ற திட்டங்கள் வெற்றியைத் தரும். சிக்கலான நாளாக இருந்தாலும் உங்களுடைய தைரியம் சூழ்நிலை சாதகமாக மாற்றும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சில நல மாற்றங்கள் நடக்கும். இன்றைய சக ஊழியர்களின் ஆதரவு எதிர்பார்க்கலாம்.


மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் ஆக்கப்பூர்வமான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். கலை துறையில் மேற்கொள்ளும் முயற்சிகள் நல்ல பலனை தரும். இன்று நீங்கள் விரும்பும் சில நல்ல விஷயங்கள் நடக்கும். அதேபோல நிம்மதியான ஓய்வும் கிடைக்கலாம். வேலை, தொழில் தொடர்பாக புதிய திட்டங்கள் மனதில் தோன்றும். உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு பெற முயற்சி செய்யவும். முக்கிய வேலைகளை முடிப்பதில் அட்டவணை போட்டு செயல்படுவது நல்லது.


கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் ஆக்கபூர்வமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் அர்ப்பணிப்புடன் எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் நல்லா முன்னேற்றத்தை காணலாம். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த பணிகளை முடிக்க முடியும். இன்று வாதங்களை ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் உங்கள் சாக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திருமணம் போன்ற சுப காரியங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் செலவுகளை கண்காணிக்க வேண்டிய நாள். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் சில விட வாய்ப்பு கிடைக்கும்.


சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் இன்று ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள். வேலையில் மூத்த அதிகாரிகளின் சில செயல்பாடு உங்கள் வேலையை தடுக்க கூடியதாக இருக்கும். இன்று சுப காரியங்களில் நேரம் சொல்லிவிட வாய்ப்பு உண்டு. குடும்பத்தினருடன் அனுசரித்து செல்ல வேண்டிய நாள். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும்.


கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்றுஉங்கள் பேச்சு செயல்பாடுகளில் நிதானம் மற்றும் எச்சரிக்கை கடைபிடிக்கவும். மற்றவர்களுடன் எந்தவித மோதலிலும் ஈடுபடாமல் கவனமாக இருக்கவும். வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பான விவாதங்களில் ஈடுபடுவீர்கள். இன்று நீங்கள் விதியை விட மனநம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். மாலை நேரத்தில் உங்களுடைய நிலைமை மேம்படும்.இன்று உங்களுடைய நட்பு உரையாடல் புதிய யோசனைகள் மற்றும் வாய்ப்புகளை தரக்கூடியதாக இருக்கும்.


துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நன்மை தரக்கூடிய நாள். வேலை தொடர்பாக எந்த ஒரு தகராறும் தீர்க்கப்படலாம். நீங்கள் புதிய திட்டத்தை தொடங்கலாம். குடும்பம் மற்றும் உங்களை சுற்றி உள்ளவர்கள் சொத்து தொடர்பாக சில சிக்கலை உருவாக்க முயற்சிப்பார்கள். எந்த ஒரு வேலை மற்றும் செயல்களில் அவசர முடிவு எடுப்பதை தவிர்க்கவும். உயிரை தொடர்பாக சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். அதே சமயம் எந்த வித வாக்குவாதங்களிலும் ஈடுபட வேண்டாம்.


விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நிதி சூழ்நிலை வலுவாக இருக்கும். நாள் முழுவதும் லாபகரமான வாய்ப்புகள் தேடி வரும். இன்று எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவது நல்லது. உங்கள் குடும்பத்தில் அமைதியும் திறக்கனும் அதிகரிக்கும். உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பாக புதுமையை போற்றும் நினைப்பீர்கள். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் எதிர்காலத்தில் நன்மைகளை வாரி வழங்கும். உங்கள் வேலை புத்துயிர் பெறக்கூடிய நாள். தனிமையில் இருக்கக்கூடிய நபர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்து விதத்தில் நல்ல துணை அமைய வாய்ப்பு உண்டு.


தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எந்த விஷயத்திலும் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நாள். வியாபாரத்தில் எந்த வித ரிஸ்க் எடுப்பது தவிர்க்கவும். இன்று அன்றாட வழக்கத்தை தாண்டி புதிதாக சில விஷயங்களை முயற்சிக்கவும். அன்புக்குரியவர்களுக்கு பணம் உதவி செய்ய வேண்டியது இருக்கும். இன்று உங்களை தேடி ஒரு புதிய வாய்ப்பு வரும். அதன் மூலம் அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் உறவுகளே அனுசரித்து செல்ல வேண்டிய நாள்.


மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். கூட்டணி வியாபாரம் அல்லது வணிகம் தொடர்பாக லாபம் தரும். உங்கள் பிள்ளைகளின் விஷயத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்கும். நேர்மறையாக யோசிப்பதும், நேர்மையுடன் நடந்து கொள்வதும் அவசியம். இன்று வேலை தொடருமாக விதிகளை சரியாக கடைபிடிக்கவும். ஒரே நேரத்தில் பல பணிகளை செய்து நேரிடும். அதனால் மனதில் பதற்றம் ஏற்படும். கடினமான நேரத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கலாம்.


கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும். வானிலை மாற்றம் காரணமாக சிலருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படும். வேலை மட்டும் தொழில் தொடர்பாக சில இனிமையான செய்திகள் கிடைக்கும். அதே சமயம் முதலீடு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரப்பட வேண்டாம். உணவு விஷயத்தில் நிதானம் தேவை. இன்று உங்கள் ஆற்றல் குறைந்தது போல் உணர்கிறீர்கள். அதனால் எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.


மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு லாபகரமான நாளாக அமையும். வேலை, வியாபாரத்தில் ஆபத்தான முயற்சிகளை விடுத்து நேர்மையான விஷயங்களில் ஈடுபடவும். இன்று உங்கள் செயல்பாடுகளில் பொறுமை மற்றும் மென்மையான நடத்தை பிரச்சினைகளை தீர்க்க உதவும். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்துவது மூலம் உங்களுக்கான அடையாளத்தை நிரூபிக்க முடியும். இன்று தேவைப்படும் சிலருக்கு உதவுங்கள். புதிய யோசனை, திட்டங்கள் மனதில் தோன்றும் இது உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படும்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.