சிலிண்டருக்கு பாடை கட்டி போராட்டம்... ஒருவர் மயங்கி சரிந்து உயிரிழப்பு!

சிலிண்டர் விலையேற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன

இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நகரில் நேற்று மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிலிண்டருக்கு பாடை கட்டி எதிர்ப்பு தெரிவித்து பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாலகொட்டையா என்ற காங்கிரஸ் தொண்டர் திடீரென உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறி விட்டனர்.

இந்த சம்பவம் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.