யாழை உலுக்கிய சோகம்-இளம் சட்டத்தரணி திடீர் மரணம்

மாரடைப்பினால் இளம் குடும்பஸ்தரும் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் வடமராட்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தையும் யா/ வட இந்து மகளிர் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் விஸ்வர்யா அவர்களின் கணவரும் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை தனது பணி முடித்து மாலை 5 மணியளவில் வீடு திரும்பிய போது நெஞ்சுக்குள் ஒரு மாதிரியாக இருப்பதாக மனைவியிடம் கூற, மனைவி இஞ்சி போட்டு தேநீர் வழங்கி உள்ளார். பின்னர் இரவு 7 மணியளவில் உடல்நலம் குறைவினால் உடனடியாக நெல்லியடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த இளவயது மரணம் அப்பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.