மத்திய கிழக்கு போரால் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வால் சவப்பெட்டியின் விலை நேற்று (மார்ச் 22) முதல் சுமார் ரூ. 3,000 உயர்த்தப்பட்டுள்ளதாக இறுதிச் சடங்கு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டீசல் மற்றும் பெட்ரோல் விலையேற்றமானது, சவப்பெட்டி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலையை உயர்த்தியுள்ளதாகவும், இதுவே இந்த விலை மாற்றத்திற்கு வழிவகுத்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.எனினும், இறுதிச் சடங்கு உதவிச் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு, சவப்பெட்டிகள் மற்றும் அது சார்ந்த இறுதிச் சடங்கு சேவைகள், முன்னரே ஒப்புக்கொள்ளப்பட்ட கட்டணங்களிலேயே தொடர்ந்து வழங்கப்படும்.அத்தகைய சங்கங்களின் கீழ் வராத இறப்புகளுக்கு, அடிப்படை நிலையிலான சவப்பெட்டி மற்றும் அது சார்ந்த சேவைகள் இனி ரூ. 38,000 என்ற தொடக்க விலையில் வழங்கப்படும் என்று இறுதிச் சடங்கு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் விலையில் மேலும் ஏதேனும் உயர்வு ஏற்பட்டால், சவப்பெட்டி விலைகள் மற்றும் சேவைக்கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
