மன்னாரில் நேற்றைய தினம் விற்பனை செய்யப்பட்ட பனங்கள்ளுக்குள் இறந்த பல்லி ஒன்றின் முழு உடல் காணப்பட்டமை கள் பிரியர்கள் மத்தியில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு கொள்வனவு செய்யப்பட்ட கள்ளு போத்தலிலேயே மேற்படி இறந்த பல்லியின் உடல் முழுவதுமாக கிடந்துள்ளது.
இந்த நிலையில் மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களின் கவனத்துக்கு குறித்த விடயம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இயற்கையான கள்ளு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் பலர் அவற்றை கொள்வனவு செய்யாது போத்தல்களில் அடைக்கப்பட்ட கள்ளை கொள்வனவு செய்து அருந்தி வரும் நிலையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போத்தல் கள்ளில் ஏதேனும் மாறுதல்கள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் காரியலத்தை தொடர்பு கொண்டு தயங்காமல் தெரிவிக்க வேண்டும் என அறிவுருத்தபடுகின்றனர்.
