மிதிபலகையிலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா - ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேருந்தில் ஏறுவதற்கு முற்பட்ட வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.இவ்விபத்து இன்று (31) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் மிதிபலகையில் ஒரு காலை வைத்து ஏறும்போது தவறுதலாக வீதியில் விழுந்துள்ளார். வீதியில் விழுந்த பெண்ணின் மீது பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி அவரது இரு கால்களும் நசுங்கி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது .இவ்விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
