குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த ராசிகாரர்களுக்கு கோடீஸ்வர யோகம் காத்திருக்கு..

 குருபகவானின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குருபெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஞானம், அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் ஆகியவற்றின் அதிபதியான குருபகவான், மார்ச் 11 மிதுன ராசியில் தனது நேரடி இயக்கத்தைத் தொடங்கியது.

டிசம்பர் 13 வரை குருபகவான் இந்த நேரடி இயக்கத்தைத் தொடரப்போகிறார். அடுத்த ஒன்பது மாதங்களுக்கு குருபகவான் சில ராசிக்காரர்களுக்கு வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைக் கொண்டுவரவுள்ளது.குருபகவானின் இந்த மாற்றம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் முக்கியமானதாக இருந்தாலும் சில ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றத்தால் மகத்தான நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு, குரு பகவான் இரண்டாம் வீட்டில் நேரடி பயணத்தைத் தொடங்கியுள்ளார். சொத்து வாங்குவதற்கோ அல்லது விற்பதற்கோ இது மிகவும் பொருத்தமான காலகட்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் தாங்கள் விரும்பும் பல காரியங்களை இப்போது சாதிக்க முடியும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் மற்றும் செல்வம் பெருகும். அவர்கள் குழந்தைகள் மூலம் சில நல்ல செய்திகளைக் கேட்கலாம்.

கடகம்: பணியிடத்தில் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் விரைவான மற்றும் சிறந்த பலன்களைத் தர வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிக லாபத்தை அடைவார்கள். கடனாகக் கொடுக்கப்பட்ட பணம் திரும்ப கிடைக்கும். மேலும் அவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் தம்பதிகளிடையே அன்பும், நெருக்கமும் அதிகரிக்கும்.

தனுசு:தனுசு ராசிக்காரர்களுக்கு குருபகவானின் இந்த நேரடி இயக்கம் புதிய திட்டங்களை தொடங்குவதற்கு சிறந்த காலமாக இருக்கும். அவர்களின் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட சிறப்பான லாபத்தை அடைவார்கள். பணியில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் ஆதரவால் பெரிய விஷயங்களை சாதிக்க முடியும். கூட்டுத் தொழிலைத் தொடங்குவதற்கு இது சரியான காலம். இதுவரை இருந்து வந்த நிதி சிக்கல்கள் இப்போது முடிவுக்கு வரும். இந்த குருபெயர்ச்சியால் அவர்கள் வெற்றிபடிக்கட்டில் வேகமாக செல்வார்கள்.

மீனம்: இந்த கிரக மாற்றத்தால் பணியிடத்தில் நிலவிய சிக்கல்கள் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்குப் பொருத்தமான வேலைவாய்ப்புகள் அமையலாம். வேலையில் அவர்களின் செயல்திறன் மற்றவர்களை ஆச்சரியப்படுத்தும். அவர்களின் கடின உழைப்புக்கும் முயற்சிக்கும் பலன் கிடைக்கும். உறவுகளில் நிலவி வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும், வாழ்க்கைத்துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். இது மொத்தத்தில் மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும்



கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.