இலங்கையில் தங்க நகை உள்ளிட்ட பெறுமதியான சொத்து வைத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையில் தங்க நகைகள், பணம் உள்ளிட்ட பெறுமதியான சொத்துக்கள் வைத்திருப்பவர்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கையை வழங்கியுள்ளனர்.

அந்த வகையில் நாட்டில் அண்மைக்காலமாக வீட்டுப் பணியாளர்களினால் திருடும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்படும் பணியாளர்கள், அந்த வீடுகளில் உள்ள தங்க நகைகள், பணம், வெளிநாட்டு நாணயம் மற்றும் ஏனைய பெறுமதியான சொத்துக்களைத் திருடிச் செல்வதாகப் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.முகவர் நிலையங்கள் அல்லது இடைத்தரகர்கள் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ வேலைக்குச் சேரும் நபர்கள், இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனவே, வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது அவர்களது தேசிய அடையாள அட்டை, பொலிஸ் நடத்தைச் சான்றிதழ் என்பவற்றைப் பெறுவதுடன், குடும்ப உறுப்பினர்களின் விபரங்களையும் சரிபார்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், நகை மற்றும் பணத்தைப் பாதுகாப்பான இடங்களில் வைக்குமாறும், பணியாளர்களை வீடுகளில் தனியாக விட்டுச் செல்வதைத் தவிர்க்குமாறும், புதிய பணியாளர்கள் குறித்த விபரங்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். 

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.