சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (31.03.2026) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கம் 4,561.4 டொலர்களாக பதிவாகியுள்ளது.
அதேவேளை நேற்றைய தினம் உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கம் 4,511.85 டொலர்களாக பதிவாகியிருந்தது. அத்துடன் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (31.03.2026) 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 396000 ரூபாவாக காணப்படுகிறது.
22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 364300 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சர்வதேச சந்தையில் வெள்ளி ஒரு அவுண்ஸின் விலை 71.98 டொலர்களாக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
