தனிப்பட்ட தகராறு காரணமாக ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதில் குறித்த நபர் பலத்த காயமடைந்துள்ளார்.இதனைத் தொடர்ந்து பதீகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் திக்வெல்ல - ரத்கம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட
விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
