எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் சற்று முன் வெளியான அறிவிப்பு

 

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாகவே எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். 

இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இது குறித்து மேலும் கூறியதாவது, 

அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், எரிபொருள் விலை என்பது விலை சூத்திரத்தின் அடிப்படையிலேயே அதிகரிக்கப்பட்டது. 

விலை சூத்திரம் என்பது ஒன்றும் விசித்திரமான சூத்திரம் அல்ல. எரிபொருளைக் கொண்டுவரும் செலவு மற்றும் அதற்கான ஏனைய செலவுகள் - இவற்றைத் தவிர அதில் வேறொன்றும் இல்லை. 

100 ரூபாயை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், விலை சூத்திரத்தின்படி வரவேண்டிய விலையை விடக் குறைவான விலையே நிர்ணயிக்கப்படும் என அமைச்சர் கருதியிருக்கலாம். 

பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலை சூத்திரத்தின்படி விலையைக் கணித்து அரசாங்கத்திற்கு அறிவிக்கும். அதன் பின்னரே அரசாங்கம் முடிவெடுக்கும். கூட்டுத்தாபனம் சமர்ப்பிப்பது தான் இறக்குமதி செய்த விலை மற்றும் அதற்கான செலவு ஆகியவற்றை மட்டுமே தவிர, அந்தச் சூத்திரத்தில் வேறு எந்த விடயமும் இல்லை. 

மாதத்திற்கு ஒருமுறை விலை சூத்திரத்தைக் கணிப்பது மாதத்தின் சராசரியைக் கொண்டு அல்ல, அந்த மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கையிருப்பைக் கொண்டே கணிக்கப்பட்டது. 

முன்பு ஒரு மாத காலத்திற்குள் உலக சந்தை விலையில் பாரிய மாற்றங்கள் இல்லாதபோது, மாதத்திற்கு ஒருமுறை இப்படிக் கணிக்க முடிந்தது. இப்போதும் அப்படியே கணிக்கப்படுகிறது. ஆனால், இப்போது ஒரு மாதம் வரை காத்திருக்க முடியாது, ஏனெனில் உலக சந்தையில் எரிபொருள் விலை வேகமாக மாறுகிறது. சூத்திரம் அதேதான், ஆனால் சூத்திரத்தைக் கணிக்கும் காலப்பகுதி மட்டுமே மாறியுள்ளது. 

முதல் தடவையாக முதலாம் திகதி விலை அதிகரிக்கப்பட்டது. அது வழமையான நடைமுறைப்படியே நடந்தது. அடுத்ததாக 9ஆம் திகதி அதிகரிக்கப்பட்டது. 

போர் 28ஆம் திகதி தொடங்கியது. 28ஆம் திகதிக்கும் 9ஆம் திகதிக்கும் இடையில் விலை அதிகரிப்பு ஏற்பட்டது என அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.