இலங்கை பாடசாலை ஒன்றின் வகுப்பறையில் கொடூரமாக தாக்கப்பட்ட மாணவன்

ஹற்றன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலையொன்றின் வகுப்பறைக்குள் மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் இந்த மாணவர்கள் நேற்று (28) கைது செய்யப்பட்டதாக ஹற்றன் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். 

 

தரம் 10 இல் கல்வி பயிலும் இரு மாணவர் குழுக்களிடையே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணமாகும். 

 

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்த மோதலில் அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

 

இருப்பினும், இச்சம்பவம் பாடசாலையிலேயே சமரசம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான தாக்குதல் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. 

 

இதனையடுத்து, தாக்குதலுக்குள்ளான மாணவனின் தாயார் நேற்று (28) ஹற்றன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

அம்முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 

 

காயமடைந்த மாணவன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்ட இரு மாணவர்கள் மற்றும் பழைய மாணவர் இன்று (29) ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். 

 

அதன் பின்னர் நீதவான் ஊடாக அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என ஹற்றன் தலைமையகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.