இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையருக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை

 

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள், சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும்போது அறிமுகமில்லாத செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான அபாயம் காணப்படுவதால், இலங்கைத் தொழிலாளர்கள் இது குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,

  "இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கப் படைகள் தொடர்புபட்டுள்ள மத்திய கிழக்குப் போர்ச் சூழல் 11 நாட்களாக நீடித்து வரும் நிலையில், அது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதைக் காணமுடிகிறது.இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும்போது, இராணுவ மற்றும் தொடர்பாடல் இலக்குகளைக் குறிவைத்து ஏவுகணைகளை ஏவும் போக்குக் காணப்படுகிறது.

இது தவிர, சமூக வலைதளங்கள் அல்லது மின்னஞ்சல்கள் ஊடாக அறிமுகமில்லாத எண்கள் அல்லது கணக்குகளிலிருந்து கிடைக்கப்பெறும் எந்தவொரு செய்தியையும் அல்லது கோப்பையும் எக்காரணம் கொண்டும் திறக்க வேண்டாம் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இன்று அறிவித்துள்ளன. 

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.