புத்தாண்டிற்கு பிறகு இந்த ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கு ; உங்க இராசியும் இருக்கா

தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. இந்த வருடம் குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கூடவே அழைத்து வரவுள்ளது. ஜோதிடத்தின் படி சில கிரகங்களின் மாற்றாம் குறிப்பிட்ட 6 ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நினைத்ததை அடைந்தே தீருவார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

ரிஷபம்: இந்த ஆண்டு இந்த ராசிக்காரர்களுக்கு 5 ராஜயோகங்கள் கிடைக்கும். வேலைக்காக வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உருவாகும். கூடுதல் வருமான முயற்சிகள் மற்றும் சேமிப்பு நடவடிக்கைகள் மூலம் வருமானம் அதிகரித்து, சில பிரச்சனைகள் தீரும். திருமணமாகாமல் பல ஆண்டுகளாக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வீடு தேடி வரும். அக்டோபர் மாதத்திற்குள் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. வேலையில்லாதவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.

சிம்மம்: இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் கடந்து செல்ல வாய்ப்புள்ளது. ஜூன் மாதத்திற்குள் உங்களுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும். உறவினர்களிடையே நல்ல உறவு மேம்படும். நீங்கள் வாழ்க்கையில் நிலைபெறுவீர்கள். வருமானம் நன்றாக அதிகரிக்கும். சொத்து தகராறுகள் சாதகமாக தீர்க்கப்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

துலாம்: நீங்கள் தொடும் அனைத்தும் தங்கமாக மாறும். அந்த அளவிற்கு வாழ்க்கையில் வெற்றி வாகையை சூடப்போகிறீர்கள். பங்குகள் மற்றும் ஊக வணிகம் உள்ளிட்ட அனைத்து கூடுதல் வருமான வழிகளும் விரும்பிய பலன்களைத் தரும். நிதி நிலைமை மிகவும் நன்றாக இருக்கும். வேலையில் பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் மிகவும் பரபரப்பாக இருக்கும்.

மகரம்: இந்த ஆண்டு இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் ஒரு பெரிய நிம்மதி கிடைக்கும். சொத்துப் பிரச்சனைகளும் தகராறுகளும் சாதகமாகத் தீர்க்கப்படும். சொத்து மற்றும் நில ஆதாயங்கள் கிடைக்கும். வீட்டில் திருமணம் மற்றும் புதுமனை புகுவிழா நடைபெறும். போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் பெரும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வேலையில் பதவி உயர்வுகள் கிடைக்கும்.

கும்பம்: இந்த ஆண்டு இந்த ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் திருமண முயற்சிகளில் வெற்றி நிச்சயம். வருமானத்தை அதிகரிக்கும் முயற்சிகளும் பலனளிக்கும். முக்கியத் தேவைகள் நிறைவேறுவதோடு, நிதி மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளும் முழுமையாகத் தீர்க்கப்படும். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமானதாக இருக்கும்.

மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பானதாக அமைய வாய்ப்புள்ளது. அவர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியிலும் வெற்றி பெறுவார்கள். ஜூன் மாதத்திற்குப் பிறகு, ராசியின் அதிபதியான குரு தனது உச்ச நிலையை அடையும்போது, அவர்களின் வாழ்க்கையும் உயர் நிலையை அடையும். பல வழிகளில் வருமானம் அதிகரிக்கும். மனதின் ஆசைகள் நிறைவேறும்.


கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.