ஹதரலியத்த, பொத்தபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹதரலியத்த நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் பின்னால் பயணித்த இருவர் காயமடைந்து ஹதரலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹதரலியத்த பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.
சம்பவம் தொடர்பாக ஹதரலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
.jpeg)