ஈரானின் ஆளில்லா விமானங்கள் (Drones), உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அரேபியாவின் 'அராம்கோ' (Aramco) சுத்திகரிப்பு நிலையத்தைத் தாக்கித் தகர்த்துள்ளன.
இந்தத் தாக்குதலால் ராய்ஸ் தனுரா (Ras Tanura) தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இது சவுதிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த மோதலால் அதிகம் சிக்கித் தவிப்பது பாகிஸ்தான் தான்.
கடந்த ஆண்டு சவுதி மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடந்தால் அது இரு நாடுகள் மீதான தாக்குதலாகக் கருதப்படும். ஆனால், இப்போது ஈரானுக்கு எதிராகப் போரில் இறங்கினால், சொந்த நாட்டு மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும் என பாகிஸ்தான் அஞ்சுகிறது.
ஏற்கனவே ஈரானியத் தலைவர் காமேனி கொல்லப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் வீதியில் இறங்கி அமெரிக்க தூதரகத்தைத் தாக்கியதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருபக்கம் சவுதி ஒப்பந்தம், மறுபக்கம் ஈரான் ஆதரவு மக்கள், இன்னொரு பக்கம் ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் போர் என பாகிஸ்தான் இப்போது 'இக்கட்டில்' சிக்கியுள்ளது.
