வியட்நாமில் எரிபொருள் தட்டுப்பாடு: வீட்டிலிருந்தே பணிபுரிய ஊழியர்களுக்கு அழைப்பு!
ஈரான் மீதான போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தடைகள் மற்றும் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக, ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய (work from home) ஊக்குவிக்குமாறு வியட்நாம் வர்த்தக
அமைச்சகம் அந்நாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தொடங்கியதில் இருந்து, எரிபொருள் தட்டுப்பாட்டால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் வியட்நாமும் ஒன்று.
மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிசக்தியை வியட்நாம் பெரிதும் நம்பியிருப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று தொழில்துறை மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி அரசாங்கம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
பயணம் மற்றும் போக்குவரத்து தேவைகளைக் குறைப்பதற்காக, சாத்தியமான இடங்களில் வீட்டிலிருந்தே பணிபுரியும் முறையை வணிக நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
.jpeg)