8 வயது மாணவியுடன் பாலியல் உறவு-அக்காவை காதலித்த இளைஞன் செய்த மோசம்

சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றிய வாலிபர் ஓட்டேரியில் உள்ள தனது அக்காவீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். 

சென்னை புளியந்தோப்பு பகுதியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயதுடைய சிறுமி தாய், தந்தையுடன் வசித்து வருகிறார். 

இவரது அக்காவும் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவரும் காதலித்து வந்தனர். 

இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இருவரது பெற்றோரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர். 

இதனை தொடர்ந்து ஜோடிக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்து வந்தனர். 

இதனால் வாலிபர் அடிக்கடி காதலியின் வீட்டிற்கு சென்றுவருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். 

இதன் காரணமாக காதலி வீட்டால் அனைவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் காதலியின் தங்கையான 8-வகுப்பு படிக்கும் சிறுமியை பள்ளியில் கொண்டு விடுவதாக வாலிபர் கூறியுள்ளார். 

தங்கள் வீட்டுக்கு மருமகன் ஆகப்போகிறவர் தானே என கருதி வாலிபரை நம்பி சிறுமியை அவருடன் அனுப்பி வைத்துள்ளனர். 

இதனையடுத்து அந்த வாலிபர் சிறுமியை கடைக்கு அழைத்து சென்று துணி மற்றும் பிடித்த உணவுகளையும் வாங்கி கொடுத்துள்ளார். 

பின்னர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றிய வாலிபர் ஓட்டேரியில் உள்ள தனது அக்காவீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். 

அங்கு சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி பின்னர் வீட்டில் கொண்டுபோய் விட்டுள்ளார். 

இந்த சம்பவத்திற்கு பிறகு சிறுமி யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டு அமைதியாக இருந்த சிறுமியிடம் இது குறித்து பெற்றோர் விசாரித்துள்ளனர். 

அப்போது அக்காவை காதலித்தவர் தன்னை அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவு கொண்டதாக அதிர்ச்சி தகவலை சிறுமி தெரிவித்தார். 

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தனர். 

இதன் பேரில் பொலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். 

இந்த சம்பவம் புளிந்தோப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.