இடுகைகள்

சுக்கிரனின் ராசி மாற்றம் ; அதிர்ஷ்டத்தில் குதிக்க போகும் 3 ராசிகள் யார்?

 


ஜோதிட சாஸ்திரத்தின் படி, சுக்கிரன் அழகு, அன்பு, ஆடம்பரம் மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கான கிரகமாகக் கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் சரியான இடத்தில் அமைந்தால், அவர்களுக்கு அனைத்து விதமான அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது.

சுக்கிரன் மேஷ ராசிக்குள் நுழையும் போது அனைத்து ராசிக்கார்களும் அதற்கான பலன்களை அனுபவித்தாலும் சில ராசிக்காரர்கள் இதனால் கூடுதல் நன்மைகளை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் 

 சுக்கிரன் உருவாக்கும் சுக்ராதித்ய யோகம் மேஷ ராசியின் லக்னத்தில் உருவாகுவதால் இது அவர்களுக்கு மகத்தான நன்மைகளை வழங்கப்போகிறது. இதனால் அவர்களின் தன்னம்பிக்கையும் வசீகரமும் அதிகரிக்கலாம். வெளிநாட்டுப் பயணங்கள் அல்லது திட்டப்பணிகளுக்கான வாய்ப்புகளால், தொழில் வாய்ப்புகள் மேம்படக்கூடும். அவர்களின் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும்.

அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். அவர்களுக்கு வியாபாரத்தின் மூலம் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த கிரக மாற்றம் அவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவும் உதவும். தற்போது வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் சிறப்பான நன்மைகளை அடைய முடியும். வெளிநாடு சென்று வேலை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அவர்களின் குடும்ப வாழ்க்கையில் நிலவி வந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும்.

 தனுசு  

தனுசு ராசிக்காரர்கள் சுக்கிர பெயர்ச்சியால் எதிர்பாராத நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பிய முடிவுகளை அடைய முடியும். அவர்கள் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த சிரமங்கள் முடிவுக்கு வரும். அவர்களுக்கு புதிய வேலை தேடும் வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் தங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க முடியும்.

அவர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். இந்த கிரக பெயர்ச்சியால் அவர்களின் சேமிப்பு அதிகரிக்கும். நிதி விஷயங்களை ஒழுக்கத்துடன் நிர்வப்பதால், அவர்கள் சந்தித்து வந்த நிதி பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு இந்த காலகட்டம் பெரிய வெற்றிகளை உறுதி செய்கிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் எந்த பெரிய உடல்நலப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள மாட்டார்கள். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வந்து அமைதியும், மகிழ்ச்சியும் உருவாகும்.

கும்பம் 

 இந்த சுக்கிர பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களிலும் சாதகமான விளைவுகளைக் கொண்டுவரக்கூடும். அவர்களின் வாழ்க்கையில் நிலவி வந்த நிதி சிக்கல்கள் முடிவுக்கு வரும். அவர்கள் வாழ்க்கையின் நீண்டகால ஆசைகளில் பல இந்த காலகட்டத்தில் நிறைவேறும். நிதிப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் தேடிவரும். திருமண வாழ்க்கையில் அன்பும் பரஸ்பர பாசமும் அதிகரிக்கும்.

அவர்களின் வாழ்க்கைத் துணைக்காக சில ஆச்சரியப் பரிசுகளை வழங்கலாம். இந்த காலகட்டம் அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் பெரிய லாபத்தை அடைவார்கள்.



கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.