இன்று மார்ச் 29, 2026 ஞாயிற்று கிழமை, பங்குனி மாதம் 15ம் தேதி, மகரம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று சூரியனின் நல்லருள் அதிகமாக கிடைக்கும் நாள். இன்று மிதுனம், கன்னி, மீன ராசிக்கு நன்மை தரும். தனுசு ராசியில் உள்ள பூராடம் பின் உத்திராடம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று ராசி அதிபதியான செவ்வாய் மற்றும் அவருடன் புதன் 11 இடமான லாப ஸ்தானத்தில் சேர்ந்து சஞ்சரிக்கின்றனர். இதன் காரணமாக இன்று குடும்ப தேவைகள் அதிகரிக்கும். தர்ம காரியங்களுக்காக செலவு செய்வது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உங்கள் எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். அவர்களை வெல்லும் வாய்ப்பு உருவாக்கும். திருமண வாழ்க்கையில் இனிமையான சூழல் இருக்கும். உங்கள் வேலை, தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் லாபத்தை தரும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று ராசி அதிபதி சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவுகளை கவனமாக செய்வது நல்லது. அரசியல் தொடர்பான எதிரிகள் தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளை தொடங்குவதற்கு சாதகமற்ற நாளாக இருக்கும். இன்று உங்களுடைய வேலைகளை விரைவாகும் முடிக்கும் விதத்தில் ஆற்றலுடன் செயல்படுவீர்கள். மாலை நேரத்தில் உங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவீர்கள். உங்கள் செலவு மற்றும் முதலீடு விஷயத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய நாள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். ராசி அதிபதியான புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திசஞ்சரிப்பது உங்கள் தொழில்துறையில் வெற்றியை தரும். புத்திசாலித்தனமாக எடுக்கும் முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை தரும். உங்கள் பிள்ளைகளிடம் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் இது உங்கள் மன உறுதி அதிகரிக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள் என்பதால் மிகுந்த விழிப்புணர்வுடன், கூடுதல் முயற்சியுடன் செயல்படுவது நல்லது.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று சுப காரியங்களில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். நீங்கள் மற்றும் முயற்சிகள் மற்றும் முடிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் குழந்தைகளின் திருமணம் சார்பாக இருக்கும் தடைகள் நீங்கும். சில முக்கிய நபர்களுடன் ஏற்படும் தொடர்பு மகிழ்ச்சியையும் நல்ல பலனையும் தரும். உங்கள் ராசி அதிபதி ஆனால் சந்திரன் துலாம் ராசியில் சேர்ந்து இருப்பது சிலரால் தேவையற்ற சிக்கலை எதிர்கொள்ள வைக்கும். இன்றைய நாளில் உங்கள் பேச்சு மட்டும் செயல்பாடுகளில் நிதானத்தை கடைபிடிக்கவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் மேற்கொள்ளக்கூடிய எந்த ஒரு முயற்சி அதிர்ஷ்டத்தை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் எதிரிகளின் சதி திட்டம் தோல்வியடையும். உலக இன்பங்களை அனுபவிக்கும் நல்ல வாய்ப்பு உண்டு. உங்கள் பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்வது, சேமிக்கும் விஷயத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சியை தரும். நீண்ட காலமாக இருக்கும் மனக்கசப்பு, நிலவரான புரிதல் முடிவுக்கு வரும். புதிய நபர்களின் அறிமுகம், நட்பு கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்குச் சற்று சவாலான நாளாக அமையக்கூடும். கடக ராசியில் சந்திரன் சஞ்சரிப்பதால், நீங்கள் ஏராளமான பொறுப்புகளைச் சுமக்க நேரிடும். செவ்வாய் பகவானின் அமைப்பானது உங்களுக்கு றுசுறுப்பான மற்றும் கடின உழைப்பு தர வேண்டிய சூழலை ஏற்படுத்தும். காரியங்களைச் செம்மையாக ஒழுங்குபடுத்துவதில் உங்களுக்கு ஈடு இணை யாரும் இருக்க மாட்டார்கள். அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் உங்கள் திறமை, இன்று உங்களுக்குப் பெரும் புகழைத் தேடித்தரும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசி அதிபதியான சுக்கிரன் ஏழாம் வீட்டில் அமர்ந்துள்ளார்; மேலும், குரு பகவானும் இன்று மிதுன ராசியின் ஒன்பதாம் வீட்டில் நேர்கதியில் சஞ்சரிப்பதால் எவ்வளவுதான் கடுமையாக உழைத்தாலும், வருமானம் குறைவாகவும், செலவுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்பு இருக்கும். மறைமுக எதிரிகள் தீவிரமாகச் செயல்படுவார்கள்; அலைச்சல்கள் அதிகமாக இருக்கும் என்பதால், குடும்பத்தில் அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. சூரியன் மறையும் வேளையில் உங்களுக்குச் சற்று நிம்மதி கிடைக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியிலிருந்து குரு பகவான் ஒன்பதாம் வீட்டிலும், சனி பகவான் 5ம் வீட்டிலும் சஞ்சரிப்பதால், இன்று உங்களுக்குச் சற்று சவாலான நாளாக அமையும். ஒரு முக்கியமான வணிக ஒப்பந்தம் உங்களுக்குச் சாதகமாக இறுதி செய்யப்படலாம். இன்று உங்கள் கருத்துக்களைப் பிறருக்குத் தெளிவாக எடுத்துரைப்பதில் நீங்கள் வெற்றி பெற்றால், வரும் நாட்களில் உங்கள் மேலதிகாரிகள் கூட உங்களைப் பாராட்டுவார்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ராசியின் அதிபதியான குரு பகவான் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். இன்று சந்திரன், கடக ராசியில் அமைந்துள்ள எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அரசு சார்ந்த காரியங்களில் வெற்றி, வீட்டில் செல்வச் செழிப்பும் வளமும் பெருகுதல், மனைவி மற்றும் நண்பர்கள் மூலம் பண ஆதாயம், நல்ல ஆரோக்கியம், எதிரிகள் மீது வெற்றி மற்றும் விருப்பங்கள் நிறைவேறுதல் ஆகியவை உங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. இரவில் சுப நிகழ்வுகள் மற்றும் மங்களகரமான வைபவங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று ராசியின் அதிபதியான சனி பகவான் மூன்றாம் வீட்டில் வக்ர நிவர்த்தி அடைந்து சஞ்சரித்தாலும், அன்றாட வாழ்வின் ஆதாரமான பலன் தரக்கூடிய சந்திரன் ஏழாம் வீட்டில் சஞ்சரித்து, உங்களுக்கு வெற்றியைச் சுட்டிக்காட்டுகிறார். இன்று நற்பண்புகள் மிக்க பெரியோர்களைச் சந்திப்பது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். சொத்து சம்பந்தமான சர்ச்சைகள், உயர் அதிகாரிகளின் ஆசியுடன் சுமூகமாகத் தீர்க்கப்படும். மாலையில் உங்கள் உடல்நிலையில் சற்றுத் தொந்தரவு தரலாம் என்பதால், கவனத்துடன் இருப்பது அவசியம்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று ராசியின் அதிபதியான சனி பகவான், உங்கள் ராசியிலிருந்து இரண்டாம் வீடான செல்வ ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது உங்கள் தடைப்பட்ட வேலைகளை நிறைவேறுவதற்கு ஒரு முக்கிய காரணியாக அமைகிறது. நீங்கள் கடின உழைப்பால் ஈட்டிய பணம், ஏதேனும் ஒரு வழியில் உங்களைத் தேடி வரும் வாய்ப்புள்ளது. ஒரு மூத்தவர்களின் ஆசியைப் பெறுவது, உங்கள் முன்னேற்றத்திற்குச் சிறப்பான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். உங்கள் உடன் பிறந்தவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகளையோ அல்லது கோபத்தையோ வளர்த்துக்கொள்வதைத் தவிர்க்கவும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியின் அதிபதியான குரு பகவான், மிதுன ராசியில் அமைந்துள்ள நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். சந்திரன் ஐந்தாம் வீடான 'திரிகோண ஸ்தானத்திலும்' சஞ்சப்பதன் விளைவாக, நாள் முழுவதும் உங்களுக்குப் புதிய வருமான வழிகள் உருவாகும். உங்கள் எதிரிகள் தோல்வியடைவார்கள். உங்கள் அதிர்ஷ்டம் மீண்டும் பிரகாசிக்கத் தொடங்கும். உங்கள் தொழிலில் கூடுதல் முதலீடு செய்வது உங்களுக்குப் பெரும் லாபத்தைத் தேடித்தரும்.
