இடம் மாறும் கிரகங்கள்-இன்றைய ராசிபலன்{21.3.2026}

 

மார்ச் 21, 2026-ஆம் நாள் சனிக்கிழமை தினமான இன்று சனி பகவானை வணங்குவது, மத நம்பிக்கைகளின் படி நம் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை, மகிழ்ச்சி மற்றும் அமைதியை கொண்டு வரும். இன்றைய சிறப்பு தினத்தில் மங்களகரமான கிரக நிலை மாற்றங்கள் நிகழ இருக்கிறது. இதன் தாக்கம் ஒரு சில ராசியினருக்கு நேர்மறையான பலனையும், ஒரு சில ராசியினருக்கு சவாலான காரியத்தையும் கொண்டு வருகிறது. அந்த வகையில் உங்கள் ராசிக்கு என்ன பலன் கொண்டு வருகிறது? என சற்று விரிவாக இங்கு நாம் காணலாம்!


மேஷம் - பொறுப்புகள் கிடைக்கும்

மேஷ ராசியினருக்கு கூடுதல் பொறுப்பு கிடைக்கும் ஒரு தினமாக இன்று பார்க்கப்படுகிறது. உங்கள் மனக்கவலைகள் நீங்கும், குழப்பங்கள் குறையும். தேவையற்ற செலவுகளை குறைக்கும் வாய்ப்பு கிடைக்கும், பணத்தை போதுமான அளவு சேமிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும், உங்கள் தொழிலை விரிவுப்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்!


ரிஷபம் - பொறுமை அவசியம்!

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு அலைச்சல் நிறைந்த ஒரு தினமாக இன்று இருக்கலாம். உங்கள் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் காணப்படும் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள நிதானமும், பொறுமையும் உங்களுக்கு அவசியமாக இருக்கும். உங்கள் திறமைகளை நிரூபிக்கும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும். நம்பிக்கையுடன் இருங்கள், மனதை தளரவிடாது கடுமையாக போராடுங்கள்!


மிதுனம் - வருமானம்!

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று போதுமான வருமானம் கிடைக்கும் ஒரு தினமாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் போதுமான வருமானத்தை கொண்டு வரலாம். பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உங்களை தேடி வரும். உங்கள் திறமைகளை கௌரவிக்கும் வகையில் கூடுதல் பொறுப்புகளும் உங்களை தேடி வரும். மோட்டார் வாகனம் வாங்கும் வாய்ப்பும் காணப்படுகிறது. தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.


கடகம் - புரிதல் அதிகரிக்கும்!

கருணை உள்ளம் கொண்ட கடக ராசியினர் வாழ்க்கையில் புரிதலை கொண்டு வரும் ஒரு சிறப்பு தினமாக இன்று பார்க்கப்படுகிறது. குறிப்பாக, காதல் வாழ்க்கையில் புரிதல் அதிகரிக்கும், உங்கள் காதல் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் உண்டாகும் புரிதல், பணியிடத்தில் சுமூகமான ஒரு சூழ்நிலையை கொண்டு வரும். தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த வெற்றியையும் கொண்டு வரும்.


சிம்மம் - நம்பிக்கை!

சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசியினர், தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள். பணியிடத்தில் சவால்கள் நிறைந்த பணிகளை எடுத்து செய்வார்கள். அதில் வெற்றியும் காண்பார்கள். உங்கள் தனித்திறமைகள் வெளிப்படும், கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்பு காணப்படுகிறது. உங்கள் எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவு எடுக்க வேண்டி இருக்கும். நிதானமாக சிந்தித்து முடிவு செய்யுங்கள்!


கன்னி - மன அழுத்தம் குறையும்!

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு மன அழுத்தம் குறையும் ஒரு காலமாக இது அமையும். உங்கள் காதல் துணையுடன் உண்டான மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். திருமண வாழ்க்கையிலும் இதே நிலை நீடிக்கும். உங்கள் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கும் வாய்ப்பு பெறுவீர்கள். உங்கள் விருப்பமான பணிகளை தைரியமாக எடுத்து செய்வீர்கள். தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட பிரச்சனைகள் ஒவ்வொன்றாக முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்திலும் எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைக்கும்!


துலாம் - லாபகரமான தினம்!

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு பொருளாதார ரீதியாக தங்களை பக்குவப் படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் கவனமாக செயல்படுங்கள், உங்கள் விருப்பத்தை நோக்கி பயணியுங்கள். தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றத்தை கொண்ட வரலாம், உயர் பதவிகளை காணலாம். குழந்தைகளின் கல்வி சார்ந்த விஷயங்களில் நேர்மறையான பலன்களை காணலாம்.


விருச்சிகம் - தடைகள் விலகும்!

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள், தங்கள் தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட பிரச்சனைகள் மற்றும் சவால்களுக்கு தீர்வு காண்பார்கள். கடந்த சில தினங்களாக நீடித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தங்கள் இலக்கை அடைய தேவையான வழிகளை கண்டறிவார்கள். சந்தைப்படுத்துதல் துறையில் இருக்கும் நபர்களுக்கு சாதகமான ஒரு தினமாக இன்று அமையும். தந்தை ஆரோக்கியம் மேம்படும், மருத்துவ செலவுகளும் குறையும். ஆராய்ச்சி துறை மாணவர்கள், அரசு உதவி தொகையுடன் வெளிநாடு சென்று மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு பெறுவார்கள்.


தனுசு - தொழில் வளர்ச்சி!

சாகச பிரியர்களான தனுசு ராசியினர், தங்கள் தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றத்தை காணும் வாய்ப்பு காணப்படுகிறது. தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்; புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பினையும் பெறலாம். நிதி சார்ந்த விஷயங்களில் பதற்றமான முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பண விஷயத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் நேர்மறையான பலன்களை கொண்டு வரும். வாழ்க்கை சிறப்பாக இருக்கும். முதலீடு சார்ந்த முடிவுகளை ஒன்றுக்கு பல முறை சிந்தித்து அதன் பின்னர் எடுப்பது நல்லது!


மகரம் - ஆதரவு!

மகர ராசியில் பிறந்தவர்கள், தங்கள் வாழ்க்கை துணை மற்றும் காதல் துணையின் முயற்சிகளுக்கு துணையாக நிற்பது அவசியம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும், அதேப்போன்று உங்களின் ஆதரவை அவர்களுக்கு தெரிவிப்பதும் அவசியம். வெளிப்படையாக பேசுங்கள், பணிகளை பகிர்ந்து செய்யுங்கள். வாழ்க்கை துணையுடன் போதுமான நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். பணி வாழ்க்கை, தொழில் வாழ்க்கை இரண்டிற்கும் இடையே ஆரோக்கிய சமநிலையை உண்டாக்குவது அவசியம்.


கும்பம் - கோபம் கூடாது!

கும்ப ராசியில் பிறந்தவர்கள், தங்கள் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை பேண முயற்சி செய்வது நல்லது. உங்கள் முன் கோபத்தை கட்டுப்பாட்டில் வையுங்கள், தேவையற்ற விஷயங்களில் தலையிடுவது கூடாது. பணத்தை அளவாக செலவு செய்யுங்கள், பட்ஜெட் படி செலவு செய்யுங்கள். ஆடம்பர செலவுகள் கூடாது, வீட்டு அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பதும் கூடாது. ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்களில் இருந்து விலகி இருங்கள். ஆரோக்கியமான உணவு வழக்கமும், வாழ்க்கை முறையும் அவசியமாகும்.


மீனம் - மகிழ்ச்சி!

மீன ராசியில் பிறந்தவர்கள் தங்கள் துறையில் சிறப்பாக செயல்படும் ஒரு தினமாக இன்று காணப்படுகிறது. தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். தங்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யலாம். உடல் ஆரோக்கியம் மற்றும் பொருளாதார நிலை இரண்டிலும் எதிர்பார்த்த திருப்பத்தை கொண்டு வரலாம். எதிர்காலத்தை பாதுகாக்கும் சேமிப்பு திட்டங்களில் கவனம் செலுத்துவீர்கள். புதியவர்களின் அறிமுகம் மூலம் உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்வீர்கள்!

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.