21 வயது இளைஞரை திருமணம் செய்ய நினைத்த 52 வயது பெண்ணுக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; தகாத உறவால் விபரீதம்


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே 52 வயதுடைய பெண்ணுடன் தகாத உறவில் இருந்த 21 வயது இளைஞர், அந்தப் பெண்ணைக் கொன்று, உடலை குவாரி நீரில் கல்லைக் கட்டி வீசிய சம்பவம் நடுநடுங்க வைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள சொட்டத்தட்டி கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான பெண், கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். வேலைக்குச் சென்ற சரஸ்வதி வீடு திரும்பாததால், பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.அதனால் அவரது சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார், சரஸ்வதியைத் தேடி வந்தனர். ஆய்வு செய்ததில், மதுரை மாவட்டம் கூடக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதே ஆன சரவணக்குமாருடன் அவர் அடிக்கடி பேசி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனேபொலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் சரஸ்வதியை நான் தான் கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டார்

 சரஸ்வதியும், சரவணக்குமாரும் ஒரே கட்டடத்தில் வேலை பார்த்து வந்ததால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாக இருந்துள்ளனர்.

 அடிக்கடி பெண்ணுடன் தனிமையில் நேரம் செலவிட்டு வர, ஒரு கட்டத்தில் சரஸ்வதி தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி சரவணக்குமாரை வற்புறுத்தி உள்ளார். அவரை கொலை செய்துவிட வேண்டுமென முடிவெடுத்து கொடூர புத்திக்குள் நுழைந்துள்ளார்.

சம்பவத்தன்று தன்னை சந்திக்க வந்த சரஸ்வதியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று உலகாணி அருகே உள்ள காட்டுப் பகுதியில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

திருமணப் பேச்சு தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, அதில் சரவணக்குமார் அவரை கடுமையாக தாக்கியதில் அவர் அங்கேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, சரஸ்வதியின் உடலில் கல்லை கட்டி அருகில் இருந்த குவாரி பள்ளத்தில் வீசி எறிந்துவிட்டு, சரவணக்குமார் தப்பிச் சென்றுள்ளார்.

52 வயது பெண்ணுடன் தகாத உறவில் இருந்த 21 வயது இளைஞர், பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்து கல்லைக்கட்டி குவாரி நீரில் மூழ்கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.