2026 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு; இன்று முதல் விண்ணப்பம்


 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன.

இணையவழியிலான விண்ணப்பங்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.விண்ணப்பதாரிகள் www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகிய இணையத்தளங்களுக்குச் பிரவேசித்து வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமையத் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பாடசாலை விண்ணப்பதாரிகள் தமது பாடசாலை அதிபர்கள் ஊடாகவும், தனியார் விண்ணப்பதாரிகள் தமக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தித் தாமே நேரடியாகவும் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்பதால், உரிய காலத்திற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 1911 என்ற துரித தொலைபேசி இலக்கம் அல்லது 0112785922 போன்ற இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.