பொழுதுபோக்கிற்காக இன்னும் 2, 3 முறை ஈரானை தாக்குவோம் ; ட்ரம்பால் உலகிற்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து

 உலக நாடுகளே எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு என பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கும் நிலையில் பொழுதுபோக்கிற்காக இன்னும் 2, 3 முறை கூட ஈரானை தாக்குவோம் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்திகதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.

இதனால், பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில், ட்ரம்ப் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது, ஈரானின் கார்க் தீவிலுள்ள எண்ணெய் கட்டமைப்புகளின் பெரும்பகுதியை அமெரிக்கா, இதற்கு முன் நடத்திய தாக்குதலின்போது முற்றிலும் அழித்து விட்டது.

எனினும், பொழுதுபோக்கிற்காக இன்னும் 2, 3 முறை கூட ஈரானை தாக்குவோம் என கூறியுள்ளாதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்காசியாவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள சூழலில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சமீபத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று சர்ச்சையானது.

அதில், உலகில் அதிக அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக அமெரிக்கா உள்ளது. அதனால், எண்ணெய் விலை உயரும்போது, எங்களுக்கு நிறைய பணம் கிடைக்கிறது என ட்ரம்ப் தன்னுடைய சமூக வலைதள பதிவில் தெரிவித்து உள்ளார்.

ஆனால், ஒரு ஜனாதிபதியாக, மத்திய கிழக்கை உண்மையை சொல்ல போனால் உலகையே அழிக்கும் அணு ஆயுதங்களை வைத்திருக்கிற, ஈரானின் தீங்கு ஏற்படுத்தும் அரசாட்சியை தடுத்து நிறுத்தியுள்ளேன் என்பதே எனக்கு மிக பெரிய நன்மை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த விடயம் ஆகும். அதனை ஒருபோதும் நான் நடக்க விடமாட்டேன் என பதிவிட்டார்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.