சக்தி வாய்ந்த மாத சிவராத்திரி-இன்றைய ராசிபலன்{17.3.2026}

 

இன்று மார்ச் 17, 2026 செவ்வாய் கிழமை, மாசி மாதம் 3ம் தேதி, கும்ப ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று மரண யோகம் உள்ள தினம். இன்று மீனத்தில் சூரியன் - சனி சேர்க்கை சற்று மோசமான பலனை தர வாய்ப்பு உண்டு. இன்று மேஷ, விருச்சிகம், கும்பம் ராசிக்கு வெற்றி தரலாம். கடகம் ராசியில் உள்ள புனர்பூசம் பின்பு பூசம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது.


மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பெரியவர்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் உணர்வுகளை தொடர்ந்து நடக்க வேண்டிய நாள். இன்று நடக்கும் சில நல்ல நிகழ்வுகளால் மனநிறைவை உணர்வீர்கள். மற்றவர்களின் கருத்துக்களை கேட்க தவறாதீர்கள். குழு பணி, பணியிடத்தில் அல்லது குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சினையை தீர்க்க தரும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள், ஆராய்ச்சி துறையில் உள்ளவர்களுக்கு இன்று நல்ல பலன் கிடைக்கும். காப்பீடு அல்லது முதலீடுகள் தொடர்பான விஷயத்தில் கவனம் செலுத்தவும்.


ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று ராசி அதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருப்பதும், தைரியமான கேதுவை பார்ப்பது உங்களுக்கு பல்வேறு விதத்தில் சுப பலன்களை தருவார். இதனால் உலக இன்பங்களை அனுபவிக்க வாய்ப்பு உண்டு. நீங்கள் அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தவும். குடும்பத்திலும் பணியிடத்திலும் பெரியோர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். இன்று நீங்கள் பிறரின் கருத்துக்களை கவனமாக கேட்பது நல்லது. அவள் உங்களுக்கு பல விதத்தில் பயனுள்ளதாக இருக்கும்.


மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பாக்கிய ஸ்தானதில் சந்திரன் சஞ்சரிப்பதன் காரணமாக உங்களுக்கு அரசு தொடர்பான வேலைகள் வேகமடையும். அரசாங்கத்தின் கௌரவம் கிடைக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்திலும், பணியிடத்திலும் எதிர்பார்த்த வேலைகள் முடிக்க முடியும். உங்களுடைய தொழில் கூட்டாளிகள் மற்றும் மனைவியிடம் இருந்து முழு ஆதரவு கிடைக்கும் இதனால் மனதளவில் நிம்மதியை உணர்வீர்கள். இன்று உங்களுடைய கடன் சுமை குறையும்.இந்த அவசர முடிவு எடுப்பது, தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது அவசியம். முதலீடு விஷயத்தில் புத்திசாலித்தனம் தேவை.


கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியில் குருவின் சஞ்சாரம் செய்வது நன்மை தரக்கூடியதாக இருந்தாலும், இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் என்பதால் இன்று நீங்கள் எதிர்பார்த்த வேலைகள் முடிப்பதில் சிரமங்கள் ஏற்படும். நிலை தொடர்பாக சில சங்கடங்கள் நல்லது தடைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. புதிய உறவுகளுடைய வாய்ப்பு உண்டு. அரசியல் மற்றும் சமூகம் தொடர்பான துறைகளில் வெற்றி பெற வாய்ப்பு உண்டு. இன்று உங்களுடைய முயற்சிகள் நல்ல பலனை தரும். அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.


சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சந்திரன் உங்கள் ராசியின் ஏழாவது வீடான முக்கிய கேந்திர வீட்டில் சஞ்சரிக்கிறார்; சனி எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதன் விளைவாக, உங்கள் பணியிடத்திலோ அல்லது அலுவலகத்திலோ உங்களுக்குச் சில புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். ஆக்கப்பூர்வமான பணிகளில், கலை சார்ந்த பணிகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வலுப்பெற்று, முடிவாகுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.


கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சந்திரனின் சஞ்சாரம், ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனி பகவான் காரணமாக, இன்று நெருங்கிய நண்பர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகளும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். எனவே, உங்களைச் சுற்றிலும் ஒரு இணக்கமான மற்றும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்க முயற்சி செய்யுங்கள். பணியிடத்தில் ஏற்படும் திடீர் மாற்றம் ஒன்று உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். உங்கள் பெண் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகள் உங்களுக்குத் துணையாக நின்று ஆதரவளிக்கக்கூடும்.


துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மகத்தான மனிதர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைக்கும். இன்று அவர்கள் அவர்களின் யோசனை ஏதேனும் ஒரு விதத்தில் உங்களுக்கு உதவும். திடீர் என எதிர்பாராத சில நல்ல நிகழ்வுகள் மூலம் நன்மை. அடைவீர்கள். நீங்கள் எடுக்கும் எந்த ஒரு புதிய முயற்சிக்கும் முன் சட்ட ரீதியான மற்றும் தொழில் ரீதியான அம்சங்களை பரிசீலிப்பது நல்லது. நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த சில வேலைகளை முடிக்கும் வாய்ப்பு உண்டு.


விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும். தொழில் சார்ந்த விஷயங்களில் பிறரின் ஆலோசனை உங்களுக்கு உதவும். நாளின் பிற்பகுதியில் பெண் தோழர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களுடன் நேரம் செலவிட வாய்ப்பு உண்டு. இன்று உங்களுடைய பணி சார்ந்த அல்லது தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும் உங்களுடைய பொறுப்புகளை கவனமாக நிறைவேற்றுவது நல்லது. இன்று எதிலும் வெற்றி பெறக்கூடியதாக இருக்கும். வேலை தொடர்பான முன்னேற்றம் ஏற்படும். கடன் விஷயத்தில் கவனம் தேவை.


தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலமையான பலன் கிடைக்கும் நாள். கடந்த கால பிரச்சனைகள் விலகும். உங்கள் பொறுப்புகள் குறையக்கூடிய நாள். பணியிடத்தில் உங்களுடைய ஆலோசனை வரவேற்பையும் பாராட்டையும் பெற்று தரும். வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அதிகம் செலவழிப்பீர்கள். நீங்கள் பணம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. மாலை நேரத்தில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செல விட வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் எதிர்பார்த்தபடி ஒப்பந்தங்கள் பெறுவதற்கு முன்னால் அதன் ஆவணங்களை சரிபார்ப்பது நல்லது.


மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று தன ஸ்தானத்தில் சந்திரனின் சஞ்சாரம் காரணமாக இன்று சில முக்கிய பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டு. புதிய வெற்றிகளை ஈட்டுவதற்கு மிகவும் சாதகமானதாக அமையும். சகோதரர்களின் திருமணம் தொடர்பான சில நல்ல செய்திகளை கிடைக்கும். இதனால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஒரு நண்பர்களை அல்லது உறவினரை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. இன்று கடன் வாங்குவது அல்லது கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. இன்று பொருளாதார நிலையை மேம்படுத்த சரியாக பட்ஜெட் போட்டு செயல்படுவோம்.


கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் அதிபதி சனி பகவான் தனஸ்தானத்தில் இருப்பதும், சூரியன், சுக்கிரனுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால் அரசியல் துறையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அரசியல் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். போட்டி நிறைந்த சூழலில் உங்கள் திறமையால் நல்ல வெற்றியை பெற முடியும். நாளின் பிற்பகுதியில் உங்களுக்கு சில சுப செய்திகள் தேடி வரும். இன்று தர்ம காரியங்கள் அல்லது தொண்டு பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டு. செலவுகளை கவனமாக கையாள வேண்டிய நாள்.


மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியில் மூன்று கிரகங்களின் சேர்க்கை காரணமாக செல்வாக்கு மற்றும் செல்வம் சேரக்கூடிய நாளாக அமையும். உங்கள் வாழ்க்கை துணையிடம் இருந்து உரிய ஆதரவு, மரியாதை பெறுவீர்கள். பணியிடத்தில் மறைமுக எதிரிகளை எளிதாக சமாளிக்க முடியும். வேலை தொடர்பாக சில சிக்கல்கள் உங்களை தொந்தரவு தர வாய்ப்பு உண்டு.. ராசி அதிபதி குருவின் வக்கிர நிவர்த்தி உங்களுக்கு பக்தி மற்றும் விசுவாசத்தை அதிகரிக்கும். செலவு மற்றும் முதலீடு தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.