நூலிழையில் உயிர் தப்பிய 135 பயணிகள்" உறைய வைத்த Air India விமான விபத்து..!!

 

"நூலிழையில் உயிர் தப்பிய 135 பயணிகள்" உறைய வைத்த Air India விமான விபத்து..!!

Hyderabad - தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான புக்கெட் தீவுக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரையிறங்கும் போது கோர விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புக்கெட் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட போது, எதிர்பாராத விதமாக விமானத்தின் சக்கரங்கள் (Landing Gear) சரியாக இயங்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையை (Runway) விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. இந்தத் திடீர் விபத்தால் விமானத்திற்குள் இருந்த பயணிகள் மரண பயத்தில் அலறினர். விமான நிலையமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனது.

இருப்பினும், விமானியின் சாதுர்யமான செயல்பாட்டாலும், நல்வாய்ப்பினாலும் ஒரு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த 135 பயணிகளும் எந்தவித காயமுமின்றி பாதுகாப்பாக உயிர் தப்பியுள்ளனர் என்பது நிம்மதியை அளித்துள்ளது. முதற்கட்ட தகவலின்படி இயந்திரக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சொகுசுப் பயணம் என்று சென்றவர்களுக்கு இந்தச் சம்பவம் ஒரு பெரும் திகில் அனுபவமாக மாறிப்போயுள்ளது

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.