கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த பிக்கப் வாகனம் பஸ் வண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து
கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த பிக்கப் வாகனம் பயணிகள் பஸ் வண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இச் சம்பவம் இன்று (13) நள்ளிரவு வேளையில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக தெரிய வருவதாவது,
குருநாகலுக்கும் மெல்சிறிபுரக்கும் இடையில் உள்ள " கொக்கரல்ல" எனும் ஊரில் இன்று நள்ளிரவு எதிரே வந்த பஸ்ஸில் மோதியதில் பிக்கப்பில் பயனித்த 13வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மரணமான பெண் பிள்ளையின் தாய் மற்றும் மாமா ஆகியோர் குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பான விசாரணைகளை குருநாகல் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
