கும்பத்தில் சூரியன் புதன் சேரும் யோகம்-இன்றைய ராசிபலன்{12.3.2026}

 

இன்று மார்ச் 12, 2026 புதன் கிழமை, மாசி மாதம் 28ம் தேதி, தனுசு ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று கும்பத்தில் சூரியன் - புதன் சேரும் யோகம் 12 ராசிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இன்று மிதுனம், தனுசு, கும்ப ராசிக்கு நன்மை தரும். மேஷம், ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது.


மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய இலக்குகளை அடைய நல்ல வாய்ப்புகள் ஏற்படும். பயணங்கள் அனுகூலமான பலன்களை தரும். இன்று நீங்கள் மூத்த அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும். எந்த வித சட்ட பிரச்சனைகளிலும் கவனம் தேவை. இன்று மாலை நேரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வேலைகள் வேகமாக முடிக்க முடியும். விருந்தினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.


ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்றுஉங்கள் வேலையில் வேலை மேலதிகாரிகளுடன் அல்லது தொழில் தொடர்பாக கூட்டாளிகளுடன் கருத்து ப்பார்களா வேறுபாடுகள் ஏற்படலாம். இன்று உங்களுடைய வேலை திறமை எதிரிகளை வெல்ல உதவும். இன்று உங்கள் வீட்டில் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விருப்பமான சில பொருட்களை வாங்க வாய்ப்பு உண்டு. திருமண வாழ்க்கையில் இணக்கத்தை கடைபிடிக்கவும். சமூகத்தில் உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். இன்று உங்களுக்கு நிதி ஆதாயம் பெற புதிய வழிகள் மனதில் தோன்றும்.


மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நான் சேதிபதியான புதன் பகவான் பாக்கியஸ்தானத்தில் அதிகமான வீட்டில் சஞ்சரிப்பது மற்றும் இது மூன்றாம் வீட்டில் இருப்பதால் உங்களுடைய குடும்பத்தில் சில குழப்பமான நிலையில் இருக்கும். உங்கள் பேச்சு மற்றும் சிந்தனையில் நிதானத்தை கடைபிடிக்கவும். அரசியல் தொடர்பான முயற்சிகளில் தடை ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று மதியத்திற்கு பிறகு உங்கள் செயல்பாடுகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் வெற்றியை தர வாய்ப்பு உண்டு. மாலை நேரத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.


கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசி அதிபதியான சந்திரன் எதிரி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இன்று உங்கள் பேச்சு நிதானம் மற்றும் ரகசியங்களை யாரிடமும் வெளிப்படுத்த வேண்டாம். இன்று உங்கள் முயற்சிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். உங்கள் வாழ்க்கை துணை மற்றும் வணிக கூட்டாளிகளிடமிருந்து ஆதரவு பெறுவீர்கள். வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காண்பார்கள். மன அமைதி கிடைக்கும். இன்று அதிகப்படியான உழைப்பு காரணமாக சோர்வை சிந்திப்பீர்கள்.


சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். சமூகத்தில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.இன்று நீங்கள் செய்ய நினைக்கும் முயற்சி மற்றும் பணிகள் முடிப்பதில் கவனம் தேவை. இன்று சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. லாபத்தால் குரு மூலமாக இருப்பதால் உங்களுடைய நிதி நிலையில் நல்ல லாபம் ஏற்படும். இன்று உங்களுக்கு தடைகள் மற்றும் எதிர்ப்புகள் இருந்த போதிலும் இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவீர்கள்.


கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு 12ல் கேது, ஏழில் சனி இருப்பது பல விதத்தில் செல்வ நிலையே மேம்படுத்த உதவும். உங்களுடைய சமூக அந்தஸ்து மற்றும் கௌரவம் அதிகரிக்கும். பொறுப்புக்களை சரியாக நிறைவேற்ற முயற்சிக்கவும். இன்று பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் அல்லது பிறரின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.இன்று ஆடம்பரத்தையும் தவிர்ப்பது நல்லது. எதிர்காலத்தை நினைத்து தொலைநோக்கு பார்வையுடன் சிந்தனையுடன் செயல்படவும்.


துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களால் சேதுபதி சுக்கிர பகவான் உச்சம் பெற்று சந்திப்பது உங்களுக்கு உலக இன்பங்களை வாரி வழங்கும். உங்கள் துணையிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த ஆதரவு மற்றும் தோழமை கிடைக்கும். உங்கள் தொழில் முயற்சிகள் நல்ல பலனை தரும். இன்று உங்களுடைய மதிப்பு மிக்க பொருள் தொலைந்து போகும் அல்லது திருடப்பட வாய்ப்பு உள்ளது. அதனால் கவனமாக இருக்கவும். இன்று எந்தவித பெரிய முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. பணம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.


விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய மனம் தர்ம காரியங்களில் நாட்டம் கொள்ளும். அதற்காக செலவு செய்ய நினைப்பீர்கள். இன்று நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் மனதில் சுய திருப்தி கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு சிறப்பு அதிகாரம், அங்கீகாரம் கிடைக்கலாம். இதை பார்த்து சக ஊழியர்கள் சற்று வருத்தப்பட வாய்ப்பு உண்டு. மாலை நேரத்தில் பக்தி, பிரார்த்தனையில் நாட்டம் கொள்வீர்கள். இன்று எந்தவித சந்தாக்களையும் சரியாக ஆராய்ந்து செலுத்து நல்லது.


தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானத்தில் இருப்பதால் இன்று உங்கள் குடும்பத்தில் அமைதியற்ற மற்றும் சில விரோதமான சூழ்நிலை ஏற்படும். இன்று உங்கள் பொறுமை மற்றும் மென்மையான செயல்பாடுகள் உங்கள் மனநிலையை இலகுவாக முடியும். இன்று அன்புக்குரியவர்களுக்கு உதவ நினைப்பீர்கள். இன்று பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று நீங்கள் எந்த உறவு விஷயத்தையும் புத்திசாலித்தனமாக அணுக வேண்டிய நாள். இது நீண்டகால மன அமைதிக்கு உதவும்.


மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மற்றும் எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைக்கும். உங்கள் வீட்டில் மனைவி அல்லது பிள்ளைகளுக்கு சிலர் திடீர் உடல்நல பிரச்சனை பதற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. இன்று முக்கியமான பணிகள் செய்வது மற்றும் வாகனம் ஓட்டும்போது நிதானத்தை கடைபிடிக்கவும். உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்த நல்ல பலன் கிடைக்கும். இன்று எந்தவித ஆபத்தான செயல்களில் இருந்து விலகி இருப்பது நல்லது.


கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று ராசி அதிபதி சனி பகவான் அஸ்தமன நிலையில் இருப்பதால் இன்று உங்களுக்கு பெரிய வெற்றிகள், மகிழ்ச்சி கிடைக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்களுடைய நிதிநிலை எதிர்பார்த்த விதத்தில் முன்னேற்றம் அடைய வாய்ப்பு உண்டு. கடந்த சில நாட்களாக உங்கள் துணையுடன் இருந்த பதற்றம் தீரும். உங்கள் பேச்சில் இனிமேல் கடைபிடிக்கவும். இன்று பிறரின் உணர்வுகளை புறக்கணிக்காதீர்கள். பிறரின் கருத்துக்களை கவனமாகக் கேட்பது நல்லது. இது உறவில் பிணைப்பை ஏற்படுத்தும்.


மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று ராசி அதிபதி ஆனால் குரு மிதுனத்தில் சஞ்சரிப்பது உங்கள் பிள்ளைகளிடமிருந்து திருப்தி மற்றும் மகிழ்ச்சியை தரும். தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நாள். இன்று பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவது மரியாதையை பெற்று தரும். நேர்மறையான சிந்தனை மற்றும் சில முன்னெடுப்புகள் சமூகத்தில் உங்கள் மதிப்பை அதிகரிக்கும். இன்று உங்கள் ஆற்றலை சரியான விதத்தில் பயன்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது அவசரமாக எந்த ஒரு முடிவை எடுக்க வேண்டாம்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.