வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை வழங்குவது விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதன்படி வெளிநாட்டில் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமங்களின் அடிப்படையில், இலங்கையில் மோட்டார் வாகனங்களை ஓட்டுவதற்கு வெளிநாட்டு குடிமக்கள், இலங்கை குடிமக்கள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்ட இலங்கையர்களுக்கு தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை வழங்குவது விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, முன்னர் வேரஹெரா அலுவலகம்(Werahera Office) மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்திலிருந்து மட்டுமே வழங்கப்பட்ட தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை, இப்போது குருநாகல், ஹம்பாந்தோட்டை, கம்பகா, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் துறையின் பிராந்திய அலுவலகங்களிலிருந்தும் பெறலாம் என்று ஆணையர் நாயகம் குறிப்பிட்டார்.
இந்த சேவை 02.02.2026 முதல் தொடர்புடைய பிராந்திய அலுவலகங்களில் கிடைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.மேலும், வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தின் அடிப்படையில் நிரந்தர இலங்கை ஓட்டுநர் உரிமத்தைப் பெற விரும்பும் வெளிநாட்டினர் மற்றும் இலங்கை குடிமக்கள் வேரஹெரா ஓட்டுநர் உரிம அலுவலகத்திற்கு செல்லவேண்டுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
