வேகத்தடையால் பயணித்த மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் உயிரிழப்பு
நேற்றைய தினம் பண்டாரவளை காவல் துறை பிரிவில் உள்ள கந்தஹேல கல்லூரிக்கு முன்னால் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளால் ஒன்று வேகத் தடுப்பை கடக்க முற்ப்பட்ட போது பின்னால் அமர்ந்திருந்த 42 வயது பெண் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து நடைபெற்ற போது பாதுகாப்பான தலைக்கவசத்தையும் சரியாக அணிந்திருந்த நிலையிலும் தலையில் பலத்த அடி பட்டு அவர் உயிரிழந்துள்ளார்
சாலையில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பிற்காக கட்டப்பட்ட வேகத் தடையால் ஏற்பட்ட இந்த அகால மரணம் குறித்து பண்டாரவளை போலீசார் தற்போது மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்
