இலங்கையை அதிரவைத்த 63 கோடி! வரலாற்றில் முதல்முறை

 

இலங்கை லொத்தர் வரலாற்றின் "அதிர்ஷ்ட மகுடம்" சூட்டப்பட்டுவிட்டது! இதுவரை எந்தவொரு தனிநபரும் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒரு பிரம்மாண்ட தொகை இன்று ஒருவரைத் தேடிச் சென்றுள்ளது.

நேற்று (பிப்ரவரி 18, 2026) நடைபெற்ற 'கோடிபதி கப்ரூக' (வாரம் 2259) குலுக்கலில், சரியாக 62 கோடியே 98 இலட்சத்து 55 ஆயிரத்து 919 ரூபாய் ஜாக்பொட் விழுந்துள்ளது. இலங்கை வரலாற்றில் ஒரே ஒரு லொத்தர் சீட்டுக்குக் கிடைத்த மிகப்பெரிய தொகை இதுவே ஆகும்!

பரிசுபெற்ற இலக்கங்கள்: 25, 35, 41, 45, 52


இதற்கு முன் இருந்த பல கோடி ரூபாய் சாதனைகளை இந்த 63 கோடி ரூபாய் வெற்றி அசால்ட்டாகத் தகர்த்தெறிந்துள்ளது.


ஒரே இரவில் இலங்கையின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக மாறிய அந்த மர்ம நபர் யார் என்பது இன்னும் ரகசியமாகவே உள்ளது. ​நீங்களாக இருக்குமோ? உங்கள் பாக்கெட்டில் அல்லது மேசையில் இருக்கும் பழைய லொத்தர் சீட்டுகளைத் தேடிப் பாருங்கள், அந்த கோடீஸ்வரர் நீங்களாகவும் இருக்கலாம்!


​ஒருவேளை இந்த எண்கள் உங்களுடையதாக இருந்தால், லொத்தர் சீட்டின் பின்புறம் உடனே கையொப்பமிடுங்கள். பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடனடியாக அபிவிருத்தி லொத்தர் சபையின் (DLB) தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.